Sunday 8 September 2019

சென்னைக்கு வந்தோம்-முன்னுரை

சுயசரிதை எழுதுவது என்பதல்ல என் நோக்கம்.  இதில் தற்புகழ்ச்சி என்பதற்கே இதில் எந்த விதமான இடமும் இல்லை. அவை என்னுடைய அடக்கத்தையே பரிகாசத்திற்குள்ளாக்கும். மேலும் இதுவரை செய்திருப்பவற்றை நினைத்துப் பார்க்கப் பார்க்க, அவற்றைக் குறித்துச் சிந்திக்கச் சிந்திக்க, என் குறைபாடுகளையே நான் தெளிவாக உணருகிறேன்.
[மெய்ப்பொருள் அவர் ஒருவரே; மற்றவை யாவும் பொய்யே என்ற திடநம்பிக்கை நாளுக்கு நாள் எனக்கு வளர்ந்து கொண்டும் வருகிறது. என்னுள் இந்த உறுதி எவ்விதம் வளர்ந்திருக்கிறது என்பதை விருப்பமுள்ளோர் உணரட்டும்; அவர்களால் முடிந்தால் சோதனைகளில் பங்கு கொண்டு எனது திடநம்பிக்கையிலும் பங்கு கொள்ளட்டும். எனக்குச் சாத்தியமானது, ஒரு சிறு குழந்தைக்கும் சாத்தியமானதாகவே இருக்கும் என்ற மற்றொரு நம்பிக்கையும் என்னுள் வளர்ந்து வருகிறது. இவ்விதம் நான் கூறுவதற்குத் தக்க காரணங்களும் இருக்கின்றன. சத்தியத்தை அடைவதற்கான சாதனங்கள் எப்படிக் கஷ்டமானவையோ, அப்படி எளிமையானவை ஆகவும் இருக்கின்றன. இறுமாப்பைக் கொண்ட ஒருவனுக்கு அவை முற்றும் சாத்தியமில்லாதவையாகத் தோன்றலாம்; ஆனால் கபடமற்ற ஒரு குழந்தைக்கு அவை சாத்தியமானவை. சத்தியத்தை நாடிச் செல்பவர், தூசிக்கும் தூசியாகப் பணிவு கொள்ள வேண்டும். உலகம் தூசியைக் காலின் கீழ் வைத்து நசுக்குகிறது. ஆனால், சத்தியத்தை நாடுகிறவரே, அத்தூசியும் நம்மை நசுக்கும் அளவுக்குத் தம்மைப் பணிவுள்ளவராக்கிக் கொள்ள வேண்டும்-    இது காந்திஜியின் சத்தியசோதனை  நூலில் முன்னுரையில் ஒரு பகுதி.]
சென்னைக்கு வந்தோம் என்ற தலைப்பில் சுயசரிதை எழுதுவது என்பதல்ல என் நோக்கம்.இதுவரை செய்திருப்பவற்றை நினைத்துப் பார்க்கப் பார்க்க, அவற்றைக் குறித்துச் சிந்திக்கச் சிந்திக்க, என் குறைபாடுகளையே நான் தெளிவாக உணருகிறேன்.அவற்றைப்பதிவு செய்வதும் என் முயற்சிகளுக்கு சுழற்சிவிதியாக அமைந்த சம்பவங்களையும் அனுபவங்களையும் பகிர்ந்துகொள்ளவே நான் முயற்சிக்கிறேன்.கூடுமானவரை வாசிக்கச் சுவையான விதத்தில் எழுத முயற்சிக்கிறேன்.[தொடரும்]